மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி
விளையாட்டு போட்டிகள்
விளையாட்டு போட்டிகள்
மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அண்ணா கலையரங்கில் நீலகிரி மாவட்ட இறகு பந்து சங்கம் சார்பில் 10-வது ஆண்டு மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி இன்று துவங்கியது. இந்த போட்டியினை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. சதீஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் இறகு பந்து போட்டியில் உதகை, குன்னூர் , கூடலூர், பந்தலூர், கோத்தகிரி பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்ட்ட வீரர் விராங்கனைகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இதில் 30 வயதிற்கு உட்பட்டவர்கள், 30 - முதல் 35 வயதுடையவர்கள், 35 - முதல் 40 வயதுடையார்கள், 40 - முதல் 45 வயதுடைபவர்கள், 45 - முதல் 50 வயதுடையார்கள் என 5-ந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. வெற்றி பெறும் வீரர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கபடவுள்ளது.
Tags
Next Story