இந்திய அணி முன்னாள் கையுந்து (Volleyball) வீரர் மறைவு
இந்திய அணிக்கு விளையாடிய முன்னாள் கையுந்து (Volleyball) வீரர் மறைவு.மாநில, மாவட்ட கழக வீரர்கள் அஞ்சலி.
இந்திய அணிக்கு விளையாடிய முன்னாள் கையுந்து (Volleyball) வீரர் மறைவு.மாநில, மாவட்ட கழக வீரர்கள் அஞ்சலி.
கோவை மாவட்டம் நரசிம்மநாய்க்கன்பாளையம் குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். எஸ்.பி.ஐ வங்கியில் பணியாற்றிய இவர் தமிழ்நாடு அணிக்காக 1975ம் ஆண்டு முதல் 1986ம் 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அணியில் இடம் பெற்று இருந்தார். தமிழ்நாடு கையுந்து பந்து அணி தலைவராகவும் இருந்துள்ளார் ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய கோப்பை விளையாட்டு போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய நிலையில் இந்திய அணி மூன்றாம் இடத்தை பிடித்தது குறிப்பிடதக்கது. இவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்த தேசிய மற்றும் பன்னாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
Next Story