சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த நியூசிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் சௌதி !!

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த நியூசிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் சௌதி !!

டிம் சௌதி

நியூசிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளரும், அந்த அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனுமான டிம் சௌதி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர் 2008 ஆம் ஆண்டு மார்ச்சில் தனது 19 வயதில் டிம் சௌதி இங்கிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் நடந்த டி20 போட்டியில் அறிமுகமானார்.

டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகள், டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையும் பெற்றுள்ளார். நியூசிலாந்துக்காக 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் டிம் சௌதி என்ற பெருமையையும் அடைந்தவர்.

இவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட டிம் சௌதி தலைமையிலான நியூசிலாந்து அணி 0-2 என்ற கணக்கில் தோற்றதால் தனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தார்.

நியூசிலாந்துக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தைப் 35 வயதான டிம் சௌதி பிடித்துள்ளார். முதலிடத்தில் ரிச்சர்டு ஹார்ட்லி உள்ளார்.

Tags

Next Story