கேலோ இந்தியா விளையாட்டு: மூன்றாவது இடத்தில் தமிழகம்!

கேலோ இந்தியா விளையாட்டு: மூன்றாவது இடத்தில் தமிழகம்!

கேலோ இந்தியா

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் மூன்றாவது இடத்தில் தமிழகம் சாதனை.

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, திருச்சி,மதுரை,கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்றன.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியின் 12வது நாளின் முடிவில் பதக்கப் பட்டியலில் மகாராஷ்டிரா 53 தங்கம், 46 வெள்ளி, 50 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 149 பதக்கங்களை குவித்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஹரியாணா 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருந்தது. போட்டியை நடத்தும் தமிழகம் 35 தங்கம், 20 வெள்ளி, 36 வெண்கலம் என 91 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறது.

கேலோ இந்தியா வரலாற்றில் தமிழகம் அதிக பதக்கங்கள் குவிப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் புனேவில் நடந்த கேலோ இந்தியா இரண்டாவது பதிப்பில் அதிகபட்சமாக தமிழகம் 88 பதக்கங்கள் குவித்திருந்தது.

Tags

Read MoreRead Less
Next Story