கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி - தகுதி போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தகுதி போட்டிகளில் கலந்து கொள்ளலாம். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி
தகுதி போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசின் சார்பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், 2023-ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக நடத்திட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதற்காக சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறும் போட்டிகள் வரும் 19.1.2024 முதல் 31.01.2024 வரை நடைபெற உள்ளது. இதில் 5,000 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் செயல்திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான தேர்வு சோதனைகள் நவ 31 ஆம் தேதி முதல் டிச 2 ஆம் தேதி சென்னையில் நடத்தப்படவுள்ளது. தகுதி பெற, விளையாட்டு வீரர்கள் வயதுச் சரிபார்ப்பு (1.1.2005 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்) ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், பள்ளிக் கல்விச் சான்றிதழ் ( 12ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு) / பிறப்புச் சான்றிதழ் ஆவணங்களில் ஏதேனும் இரண்டினைச் சமர்ப்பிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் -வீராங்கனைகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.