ஹர்திக் பாண்டியாவின் சோகம் - கெவின் பீட்டர்சன் கருத்து!

ஹர்திக் பாண்டியாவின் சோகம் -  கெவின் பீட்டர்சன் கருத்து!

கெவின் பீட்டர்சன் - ஹர்திக் பாண்டியா 

ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்

கேப்டன் ஹர்திக் பாண்டியா மெகா தவறுகளை செய்து வருவதால் தான் அந்த அணி தொடர்ந்து தோற்பதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை தோல்வியடைந்தது.

இது தொடர்பாக பேசிய கெவின் பீட்டர்சன் "ஹர்திக் பாண்ட்யா டாஸ் போடும்போதும் பேட்டிங் செய்ய வரும்போதும் அளவுக்கு அதிகமாக சிரித்த முகத்துடன் இருக்கிறார். மகிழ்ச்சியாக இருப்பதுபோல தன்னை காட்டிக்கொள்ள முயல்கிறார் ஆனால் அவர் நிச்சயமாக சந்தோஷமாக இல்லை என்று பீட்டர்சன் கூறியுள்ளார்.

ரசிகர்கள் அவருக்கு ஏதிராக முழக்கமிடுவது போன்ற விஷயங்கள், ஹர்திக்கை காயப்படுத்தியுள்ளது.'' எனக் கூறியுள்ளார்.


Tags

Next Story