பாகிஸ்தானை விழ்த்தி 6- ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றி !!
இந்தியா அசத்தல் வெற்றி
டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்தியா பேட்டிங் துவங்கிய நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். இவர்கள் 13 மற்றும் 4 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறியன.
அடுத்து களம் இறங்கிய ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இவருடன் விளையாடிய அக்சர் படேல் 20 ரன்களை சேர்த்தார். தொடர்ந்து களமிறங்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்தியா அணி 19 ஓவர்களில் 119 ரன்களை மட்டுமே சேர்த்தது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா மற்றும் ஹரீஷ் ஹாரிஸ் ரௌஃப் தலா மூன்று விக்கெடுகளையும் முகமது அமீர் இரண்டு விக்கெட்டுகளையும் ஷாகிம் ஷா அப்ரிடி ஒரு விக்கெட் வீழ்த்தினார். 120 ரன்களை வெற்றி இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் 31 ரன்களையும் கேப்டன் பாபர் அசாம் 13 ரன்களையும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
அடுத்து வந்த உஸ்மான் கான் மற்றும் பாகர் சமான் 13 ரன்களை சேர்த்தனர். இவர்களை தொடர்ந்து களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் இந்தியா அணி ஆறு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து விசிய ஹர்திக் பாண்டியா இரண்டு விக்கெட்டுகளையும் ஹர்ஷிதீப் சிங் மற்றும் அக்ஷர் படேல் தல ஒரு விக்கெட் வீழ்த்தினார்.