கொல்கத்தாவில் T20 போட்டி இன்று முதல் வெற்றியுடன் தொடங்க இந்தியா திட்டம் : கடும் சவாலுக்கு காத்திருக்கும் இங்கிலாந்து | கிங் நியூஸ் 24x7

கொல்கத்தாவில் T20 போட்டி இன்று முதல் வெற்றியுடன் தொடங்க இந்தியா திட்டம்  : கடும் சவாலுக்கு காத்திருக்கும் இங்கிலாந்து | கிங் நியூஸ் 24x7
X

கிரிக்கெட் 

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி.20போட்டிமற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் டி.20போட்டி இன்று கொல்கத்தாவில் நடக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் இளம்அதிரடி வீரர்கள் உள்ளனர். சஞ்சு சாம்சன், திலக்வர்மா, கடைசியாக தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் தலா 2 சதம் விளாசினர். தொடக்கவீரர் அபிஷேக் சர்மா, ரிங்குசிங், ஹர்திக் பாண்டியா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. துணைகேப்டனாக ஆல்ரவுண்டர் அக்சர்பட்டேல் தனதுஇடத்தை தக்க வைத்துக்கொள்வார். காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 13 மாதங்களுக்கு பின் சர்வதேச போட்டியில் களம் இறங்க உள்ளார். அவருடன் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் , சுழலில் வருண் சக்ரவர்த்தி ஆடும் லெவனில் இடம்பெறுவர். மற்ற ஒரு இடத்திற்கு நிதிஷ்குமார், வாஷிங்டன், ரவி பிஷ்னோய் ஆகியோர் இடையே கடும் போட்டி உள்ளது.


மறுபுறம் இங்கிலாந்து அணியும் சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. பில்சால்ட், பென் டக்கெட், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், ஆல்ரவுண்டர்கள் ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன் அதிரடியாக ஆடக்கூடியவர்கள். வேகத்தில் அட்கின்சன், சோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட், சுழலில் அடில் ரஷித் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அளிக்கக்கூடியவர்கள். நடப்புஉலக சாம்பியனும்,நம்பர் 1 அணியுமான இந்தியா தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளனர். அதே நேரத்தில் 3வது இடத்தில் உள்ள இங்கிலாந்து இந்திய அணிக்கு கடும் சவால் கொடுக்க காத்திருக்கிறது. இந்திய நேரப்படி மாலை 7மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம்.


இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறுகையில், ”இந்தியாவுக்கு வருவது எப்போதும் மிகவும் உற்சாகமான சுற்றுப்பயணமாக இருக்கும். நாங்கள் முழு பலத்துடன் களம் இறங்குகிறோம். சில நேரங்களில் சில வீரர்கள் ஓய்வெடுக்க வேண்டி இருக்கும். ஆனால் வலுவான இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவ்வாறு இருக்க முடியாது, என்றார்.

இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், ஈடன்கார்டனில்ஆடுவது சிறந்த உணர்வாக இருக்கும் ஏனெனில் நான் இங்கு தான் டி.20 போட்டியில் விளையாடதொடங்கினேன். எனக்கும் பாண்டியாவுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. ஐபிஎல்லில் மும்பை அணிக்காக 2018ம் ஆண்டு முதல் ஒன்றாக தான் விளையாடுகிறோம். ஐபிஎல்லில் ஆடும்போது நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருப்பேன். ஆனால் இங்கு பொறுப்பு அதிகம். நானும் ஹர்திக் பாண்டியாவும் களத்திற்கு உள்ளேவும் வெளியேவும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து இந்திய அணியை முன்னோக்கி கொண்டு செல்வோம். இதேபோன்று அக்சர் பட்டேலுக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பாண்டியாவுக்கு கேப்டன் பதவி இல்லை என்றாலும் அவரும் அணியில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். அணியின் நிர்வாகக் குழுவில் அவர் இருப்பார். சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம்பெறாதது குறித்து எனக்கு ஏன் வலிக்க வேண்டும். நான் நன்றாக விளையாடி இருந்தால் அந்த அணியில் நிச்சயம் இருந்திருப்பேன். சாம்பியன்ஸ் டிராபி அணியில் அனைவரும் தரமான வீரர்கள். சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தக் கூடிய வீரர்களாக இருக்கிறார்கள் என்றார்.


இரு அணிகளும் இதுவரை 24 டி.20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 13ல் இந்தியாவும், 11ல் இங்கிலாந்து வென்றுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டிகளில் இந்தியா 3, இங்கிலாந்து 2ல் வென்றுள்ளன.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இந்தியா இதுவரை 7 டி.20 போட்டிகளில் ஆடி 6ல் வென்றுள்ளது. ஒரு போட்டியில் மட்டுமேதோல்வி(2011ல் இங்கிலாந்துக்குஎதிராக) அடைந்திருக்கிறது. இங்கிலாந்து இங்கு 2 போட்டிகளில் ஆடி ஒருவெற்றி(இந்தியாவுடன்), ஒரு தோல்வி’2016 உலககோப்பை பைனல்) தோல்வி அடைந்துள்ளது. இங்கு 2016ல் பாகிஸ்தான், வங்கதேசத்திற்குஎதிராக 201/5 ரன்தான் அதிகபட்ச ஸ்கோர். 2022ல் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 186/5 ரன்தான் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. இங்கு ,இதுவரை 11 சர்வதேச டி.20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில்பேட் செய்த அணி 5 போட்டியிலும் சேசிங் அணி 6போட்டியிலும் வென்றுள்ளன.

Tags

Next Story