இறுதி டி20 கிரிக்கெட் போட்டியிலும் அபார வெற்றி அடைந்த இந்தியா !!

இறுதி டி20 கிரிக்கெட் போட்டியிலும் அபார வெற்றி அடைந்த இந்தியா !!
X

4வது டி20 கிரிக்கெட் போட்டி தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று நடந்தது. இந்தியா அபாரமாக ஆடி, 11 ஓவர்களில் 142 ரன் குவித்தது. தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. ஏற்கனவே ஆடிய 3 போட்டிகளில் 2ல் வென்று, 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், 4வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய இருவரும், 4.1 ஓவர்களில் 50 ரன்களை குவித்தனர். 5.5 ஓவரில் ஸ்கோர் 73 ஆக இருந்தபோது, முதல் விக்கெட்டாக அபிஷேக் சர்மா (36 ரன்) எடுத்து வீழ்ந்தார்.

இதையடுத்து, கடந்த போட்டியில் சதமடித்த திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். 11 ஓவர் முடிவில் இந்தியா 142 ரன் குவித்திருந்தது. சஞ்சு சாம்சன் 33 பந்துகள் விளையாடி, 5 சிக்சர், 5 பவுண்டரிகளுடன், அவுட் ஆகாமல் 66 ரன் எடுத்திருந்தார். அபிஷேக் சர்மா, 15 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 31 ரன் எடுத்திருந்தார்.

Tags

Next Story