கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய வீரர் விருத்திமான் சஹா !!

கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய வீரர் விருத்திமான் சஹா !!

சஹா

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் விருத்திமான் சஹா அறிவித்துள்ளார். இந்திய அணியில் இருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு அறிவித்தப் பிறகு, அவருக்கு மாற்றாக விருத்திமான் சாஹாதான் டெஸ்டில் இடம்பெற்று வந்தார். இந்த நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக விருத்திமான் சஹா அறிவித்துள்ளார்.

சாஹா 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்தே விளையாடி வருகிறார். முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்ற சாஹா, அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றார். தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் சாஹா விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட் கீப்பரான சஹா 40 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.டெஸ்டில், 3 சதங்கள் உட்பட 1353 ரன்களை விருத்திமான் சாஹா எடுத்துள்ளார். கடந்த மாதத்தோடு, சாஹாவுக்கு 40 வயது வந்துவிட்டது. இனியும், இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்பதால், நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரோடு, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக விருத்திமான் சாஹா தெரிவித்துள்ளார்.

ஓய்வு பற்றி கூறிய சாஹா, ‘‘கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுகிறேன். வங்க அணிக்காக, கடைசியாக ஒருமுறை ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாட உள்ளேன். இத்தொடர் முடிந்த உடன், ஓய்வுபெற்றுவிடுவேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி’’எனப் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story