பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய தமிழக அணி வீரர்கள் அசத்தல்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய தமிழக அணி வீரர்கள் அசத்தல்!

பாரிஸ் ஒலிம்பிக்

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 4x400m ஒலிம்பிக் தொடர் ஓட்டப் போட்டிக்கான தகுதிப் போட்டிகள் பஹாமஸ் தலைநகர் நசாவுவில் நடைபெற்றன. இந்த உலக தடகள தொடர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், இரண்டாவது இடம் பிடித்து பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றன.

பெண்களுக்கான 4X400 மீட்டர் பிரிவில் ரூபால் சவுத்ரி, எம்.ஆர்.பூவம்மா, ஜோதிகா ஸ்ரீ டாண்டி, சுபா வெங்கடேசன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆடவர் அணியில் இடம்பெறுள்ள ஆரோக்கிய ராஜீவ், மகளிர் அணியில் சுபா வெங்கடேசன் ஆகியோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

பாரிஸ் ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்க உள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவைச் சேர்ந்த 19 வீரர், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story