தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி !!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி !!
X

இந்திய அணி 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 61 வித்தியாசத்தில் ரன்கள் இந்திய அணி வெற்றி அடைந்தது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி டர்பனில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

டர்பனில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை எடுத்த நிலையில் 203 என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 17.5 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆட்டத்தை இழந்தது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையை பெற்றுள்ளது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக 107 ரன்கள் எடுத்து சாம்சன் அசத்தினார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றது.

Tags

Next Story