ஐ.பி.எல் 2024 - ராஜஸ்தான் ராயல்சும், டெல்லி கேப்பிட்டல்சும் இன்று மோதல் !!

ஐ.பி.எல் 2024 - ராஜஸ்தான் ராயல்சும், டெல்லி கேப்பிட்டல்சும் இன்று மோதல் !!

ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

ஐ.பி.எல். போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையில் ராஜஸ்தான் ராயல்சும், சஞ்சு சாம்சன் தலைமையில் டெல்லி கேப்பிட்டல்சும் இன்று மோதுகின்றன.

டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளி கள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் டெல்லி அணிக்கு உள்ளது.

ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 12 ரன்னில் ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்தது. அதற்கு டெல்லி கேப்பிடல்ஸ் பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி டெல்லியை மீண்டும் வீழ்த்தி 9-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்று ஆர்வத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் ராஜஸ் தான் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் முதல் அணியாக இருக்கும். இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் 15-ல், டெல்லி 13-ல் வெற்றி பெற்றுள்ளன.

இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கள் உள்ளது. பொருத்திருந்து பார்போம்.

Tags

Read MoreRead Less
Next Story