ஐ.பி.எல் - டெல்லி அணியை வீழ்த்தி 47 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி மாபெரும் வெற்றி !!!!
ஐ.பி.எல்
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 47 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2024 நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் களமிறங்கின.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களம் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியின் ரஜத் படிதார் 52 ரன்களும், வில் ஜாக்ஸ் 41 ரன்களும் ,கேமரூன் கிரீன் 32 ரன்களும் எடுத்தனர்.
டெல்லி அணியின் கலீல் அகமது ,ரசிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.
இதனால் பெங்களூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணியில் யாஷ் தயாள் மூன்று விக்கெட்டையும் ,லாக்கி பெர்க்சன் இரண்டு விக்கெட்டுகளையும், கேமரூன் கிரீன், ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.