லக்னோவில் தொடங்கும் இரானி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி !!

லக்னோவில் தொடங்கும் இரானி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி !!

லக்னோ

லக்னோ : நடப்பு ரஞ்சி சாம்பியன் மும்பை அணியுடன் இதர இந்திய அணி மோதும் இரானி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று தொடங்குகிறது.

லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இரானி கோப்பை போட்டியில் ரஞ்சி டிராபி 2023-24 சாம்பியனான மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியாவை (ROI) எதிர்கொள்கிறது.

ஒரே ஒரு ஆட்டம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) இன்று உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் ROI கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரகானே தலைமையிலான மும்பை அணியில் நட்சத்திர வீரர்கள் பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ், சர்பராஸ் கான், மோகித் அவஸ்தி, ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதர இந்தியா அணியில் கேப்டன் ருதுராஜ், இஷான், ஈஸ்வரன், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், முகேஷ் குமார், கலீல் அகமது, பிரசித் கிருஷ்ணா, ராகுல் சாகர், துருவ் ஜுரெல், யாஷ் தயாள் களமிறங்குகின்றனர்.

Tags

Next Story