சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறுகிறாரா ஜடேஜா?
ஜடேஜா
சென்னை சூப்பர் கிங்ஸ்அணியின் நம்பிக்கையின் நட்சத்திரமாக விளங்கும் ஆல்ரவுண்டர் ஜடேஜா தற்போது அணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஜடேஜா விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடர் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய ஜடேஜாவை ராக் ஸ்டார் என்று மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் வார்னே கணித்திருந்தார். அவருடைய கணிப்புக்கு ஏற்ற வகையில் ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் தலை சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கி வந்தார்.
எனினும் ஜடேஜாவுக்கு தற்போது 35 வயது ஆகிவிட்டது. இதனால் அவருடைய செயல்பாடு கொஞ்சம் சரிவை நோக்கி சென்று வருகிறது. இதன் காரணமாக இந்திய டி20 அணியிலிருந்து ஜடேஜா ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். மேலும் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கூட ஜடேஜா சேர்க்கப்படவில்லை. இதற்கு காரணம் வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளில் ஜடேஜா முன்பு போல் செயல்படுவதில்லை என்று விமர்சனம் தான். கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தடுமாறியதற்கு முக்கிய காரணம் ஜடேஜாவில் பேட்டிங் தான். 2024 ஆம் ஆண்டு சீசனில் ஜடேஜா 267 ரன்கள் எடுத்து மொத்தம் எட்டு விக்கெட்டுகளை தான் கைப்பற்றினார்.
அதேபோன்று 2023 ஆம் ஆண்டு ஜடேஜாவை தவிர மற்ற போட்டிகளில் ஜடேஜா பெரியதாக சாதிக்கவில்லை. மொத்தமாகவே பேட்டியில் 190 ரன்கள் தான் எடுத்தார். ஆனால் பந்துவீச்சில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் ஜடேஜா தன்னுடைய இறுதி கட்ட கிரிக்கெட் வாழ்க்கையை நெருங்கி இருக்கிறார்.
இதனால் தன்னுடைய சொந்த ஊரான குஜராத் அணிக்கு சென்று விளையாட ஜடேஜா ஆலோசித்தி வருவதாக தகவல் வெளியாகி வருவது சிஎஸ்கே அணியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேல் இருந்து விட்டதால் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி பக்கத்தை குஜராத் அணிகள் செலவிடலாம் என ஜடேஜா முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.மேலும் ஜடேஜா கடந்த 2022 ஆம் ஆண்டு சீசனில் கேப்டனாக நியமிக்கப்பட்டு பின் பாதையிலே நீக்கப்பட்டார். அதன் பிறகு சிஎஸ்கேவுக்கும் ஜடேஜாவிற்கும் விரிசல் ஏற்பட்டாலும் பின் இரு தரப்பினரும் சமாதானம் ஆகிக்கொண்டனர். இந்த நிலையில் தான் ஜடேஜா குஜராத் அணிக்கு கேப்டன் பதவிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் சிஎஸ்கே அவ்வளவு எளிதாக ஜடேஜாவை விடாது என தெரிகிறது. ஒருவேளை இளம் வீரர்களை நோக்கி சிஎஸ்கே நகர்ந்தால் ஜடேஜாவை முதல் ஆளாக வெளியே அனுப்பி விடும்.