ஐபிஎல் 2024- ல் சாம்பியன் பட்டம் பெற்ற கொல்கத்தா !!
கொல்கத்தா
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று கொல்கத்தா - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி நடந்தது. இதில், முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பேட் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகள் எடுத்தார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். வைபவ் அரோரா, சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.
இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். குர்பாஸ் அகமது மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் இணைந்து வெற்றியின் விளிம்பு வரை சென்றது. அப்போது குர்பாஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசியாக ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 52 ரன்களும் எடுக்கவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3வது முறையாக சாம்பியன் ஆனது.
இதைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வளர்ந்து வரும் வீரருக்கான விருது, ஃபேர்பிளே விருது, பர்பிள் கேப், ஆரஞ்சு கேப், மிகவும் மதிப்புமிக்க வீரர் விருது, 2-ம் இடம் பிடித்த ஹைதராபாத் அணிக்கு விருதுகளும், பரிசு தொகையும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கடைசியாக சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரூ.20 கோடிக்கான காசோலையும், ஐபிஎல் டிராபியும் வழங்கப்பட்டது.
ஷ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக ஐபிஎல் 2024 டிராபியை தனது கையால் தூக்கினார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் தலைவர் ரோஜர் பின்னி இருவரும் இணைந்து ஐபிஎல் டிராபியை வழங்கினர்.