குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

மாவட்ட குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

மாவட்ட குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான குத்துச்சண்டைப் போட்டி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் 11 பிரிவுகளில் நடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 104 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் பயிற்சி பெற்ற மாணவ- மாண–வி–கள் 17 தங்கப்பதக்கம், 11 வெள்ளிப்பதக்கம், 7 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 35 பதக்கங்கள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மாவட்ட குத்துச்சண்டை சங்க தலைவர் கே.எம். உலகநம்பி, செயலாளர் மார்டின் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். இதில் மாவட்ட தடகள சங்க செயலாளர் முத்துக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் குப்பம்மாள், பாலாஜி, லில்லி, தேவா, சிவா, ஆனந்த் மற்றும் சாமிதுரை, சுந்தர் அரவிந்த், விஜய், விக்கி, ரவி, பிரிதிவ், பாலாஜி, அப்சல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story