சிகா கல்லூரியின் சார்பில் மாரத்தான் ஓட்டம்.

சிகா கல்லூரியின் சார்பில் மாரத்தான் ஓட்டம்.

சிகா கல்லூரியின் சார்பில் மாரத்தான் ஓட்டம்.

சிகா கல்லூரியின் சார்பில் மாரத்தான் ஓட்டம்.
விழுப்புரத்தை அடுத்த கப்பியாம்புலியூரில் உள்ள சிகா மேலாண்மை மற்றும் கணினி அறிவியல் கல்லூரியின் சார்பில் வளர்ந்த பாரதம்-2047 என்ற தலைப்பில் மாணவர்களிடையே நமது பாரதத்தின் வளர்ச்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களது கருத்தை தெரிவிக்க வேண்டி விழிப்புணர்வு மாரத் தான் ஓட்டம் நடைபெற்றது, இதற்கு கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் அருண்மொழிஅரசன் கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத் தார். இந்த மாரத்தான் ஓட்டம், கோலியனூர் கூட்டு சாலையில் தொடங்கி கப்பியாம்புலியூரில் உள்ள சிகா கலை அறிவியல் கல்லூரி வரை நடைபெற்றது, இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை உடற்கல்வித்துறை இயக்குனர் தேகலீசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விவேக்பிரகாஷ், அலுவலக கண்காணிப்பாளர் பிரேமலதா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story