மங்கல்யான் திட்டத்தைவிட ஒலிம்பிக் பதக்கத்துக்காக செய்யப்பட்ட அதிக செலவு !

மங்கல்யான் திட்டத்தைவிட ஒலிம்பிக் பதக்கத்துக்காக செய்யப்பட்ட அதிக செலவு !

ஒலிம்பிக்

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் வட்டப் பாதைக்கு செயற்கை கோள் அனுப்பும் மங்கல்யான் திட்டத்திற்கான செலவை விட 2024 ஒலிம்பிக் தொடருக்கு செலவு செய்துள்ளது.

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு மொத்தமே 88.5 கோடி செலவிடப்பட்டு இருந்தது. அதில் பயிற்சியாளர்கள் செலவு, பயணச் செலவு உட்பட அனைத்தும் அடங்கும். அப்போது இந்தியா ஏழு பதக்கங்களை வென்று இருந்தது. இதை காட்டிலும் கூடுதல் செலவு செய்து அதிக வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமித்து பயிற்சி அளித்தால், இந்தியா கூடுதல் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் என நிபுணர்கள் கூறிய அறிவுரையை ஏற்ற மத்திய அரசு 2024 ஒலிம்பிக் தொடருக்கு மொத்தம் 470 கோடி ரூபாய் செலவு செய்தது.

117 வீரர்கள் இந்தியா சார்பில் ஒலிம்பிக் தொடருக்கு அனுப்பட்டனர். மொத்தம் 10 பதக்கங்கள், அதில் ஒரீரு தங்கப் பதக்கம் என்பதே இந்தியாவின் இலக்காகவும் இருந்தது. ஆனால், இந்த முறை இந்தியாவுக்கு ஆறு பதக்கங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதிலும் ஒரு தங்கப்பதக்கம் கூட கிடைக்கவில்லை. 2024 ஒலிம்பிக் தொடரில் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களை மட்டுமே இந்தியா வென்றது. இதன் மூலம், ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் இந்தியா 71 வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

இந்த நிலையில், இஸ்ரோவின் மங்கல்யான் விண்வெளி திட்டத்திற்கு செலவிடப்பட்டதை விட கூடுதல் தொகையை 2024 ஒலிம்பிக் தொடருக்காக மத்திய அரசு செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் வட்டப் பாதைக்கு செயற்கை கோள் அனுப்பும் மங்கல்யான் திட்டத்திற்கு 450 கோடி செலவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story