தேசிய தேக்வாண்டோ போட்டி - ஸ்ரீ சேஷாஸ் பள்ளி மாணவி சாதனை

தேசிய தேக்வாண்டோ போட்டி - ஸ்ரீ சேஷாஸ் பள்ளி மாணவி சாதனை

தேசிய தேக்வாண்டோ போட்டி - ஸ்ரீ சேஷாஸ் பப்ளிக் பள்ளி மாணவி சாதனை 

தேசிய தேக்வாண்டோ போட்டியில் ஸ்ரீ சேஷாஸ் பப்ளிக் பள்ளி மாணவி சாதனை
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கேகன் பப்ளிக் பள்ளியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சேஷாஸ் இன்டர்நேசனல் பப்ளிக் பள்ளி பிளஸ்-1 மாணவி குக்காலா ஹாசினி ரெட்டி 57 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு வெண்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவியை ஸ்ரீ சேஷாஸ் இன்டர்நேசனல் பப்ளிக் பள்ளியின் தலைவர், தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story