சென்னையில் ஒலிம்பிக் அகாடமி திறப்பு !

சென்னையில் ஒலிம்பிக் அகாடமி திறப்பு !

ஒலிம்பிக் அகாடமி திறப்பு

சென்னை நேரு விளையாட்டரங்கம் வளாகத்தில் ரூ 17.47 கோடி செலவில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடத்தை தமிழக விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மூன்று தளங்களைக் கொண்ட இந்த கட்டிடத்தில் தரைத்தளத்தில் பல்நோக்கு விளையாட்டு தளம் முதல் தளத்தில் டேக்வாண்டோ மற்றும் ஜூடோ விளையாட்டு தளம் இரண்டாவது தளத்தில் வாழ்வீச்சு தளம் மற்றும் மூன்றாவது தளத்தில் விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழக பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.440 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைபட்டால் கூடுதல் நிதியை முதல்வரிடம் கேட்டுப் பெறுவோம். பார்முலா கார் பந்தயம் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்." என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story