40 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான்

40 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான்

அர்ஷத் நதீம்

ஒலிம்பிக் தொடரில் இந்திய ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் நட்சத்திர வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீ எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்து, தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றுள்ளார்.

இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற மாபெரும் பெருமையை பெற்றுள்ளார் அர்ஷத் நதீம்.

மேலும் 1984ம் ஆண்டிற்கு பிறகு தங்கப் பதக்கம் வென்றுள்ளது பாகிஸ்தான்.

Tags

Next Story