பாரீஸ் ஒலிம்பிக் போட்டி - பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகளுடன் முடிவு !!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி - பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகளுடன் முடிவு !!

கலை நிகழ்ச்சி

உலகின் கவனத்தை ஈர்த்த பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா நேற்றிரவு கோலாகலமாக நிறைவடைந்தது. ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் இசை வெள்ளத்துக்கு மத்தியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், கலைஞர்களின் சாகசங்கள், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்புடன் ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றது.

நிறைவு விழா அணிவகுப்பில் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.அதன் பிறகு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மேடையில் தோன்றினார். அவர் மேற்கூரையில் இருந்து அந்தரத்தில் சாகசத்துடன் ஸ்டேடியத்திற்குள் என்ட்ரி கொடுத்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரிடம் இருந்து ஒலிம்பிக் கொடியை பெற்று அவர் மோட்டார்சைக்கிளில் சென்றார்.

'மிஷன் இம்பாசிபிள்' படம் போல் அவர் தன்னுடைய செயலை வெளிப்படுத்தினார். சில நிமிடங்கள் தோன்றிய டாம் குரூஸ் தன்னுடைய அபாரமான சாகசத்தால் பார்வையாளர்கள், விளையாட்டு வீரர்கள் கவனத்தை ஈர்த்தார். இதைத் தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய நிறைவு விழா 3.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது.

117 வீரர், வீராங்கனைகளுடன் பாரீசுக்கு படையெடுத்த இந்தியா இந்த முறை 6 பதக்கங்களுடன் (ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) முடித்துக் கொண்டது. இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் 8 வீரர், வீராங்கைகள் நெருங்கி வந்து பதக்கத்தை நழுவ விட்டனர். 4 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியாவின் இலக்கு நிறைவடையவில்லை.

Tags

Next Story