பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் கால்பந்து போட்டி: உளவு பார்த்த கனடா அணிக்கு 6 புள்ளிகள் குறைப்பு!

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் கால்பந்து போட்டி: உளவு பார்த்த கனடா அணிக்கு 6 புள்ளிகள் குறைப்பு!

பாரிஸ் ஒலிம்பிக் 

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் கால்பந்து போட்டியில் எதிரணி முகாமை உளவு பார்த்த விவகாரத்தில் கனடா அணிக்கு 6 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் மூலமாக எதிரணி முகாமை உளவு பார்த்த விவகாரத்தில் கனடாவின் மகளிர் கால்பந்து அணிக்கு 6 புள்ளிகளை குறைத்துள்ளதுடன் பயிற்சியாளருக்கும் ஃபிஃபா அமைப்பு தடை விதித்த்துள்ளது.

திங்களன்று நியூசிலாந்து மகளிர் அணியினரின் பயிற்சி முகாம் மீது ட்ரோன் பறக்கவிட்டு அவர்களின் திட்டங்களை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் போிர் கனேடிய கால்பந்து சங்கத்திற்கு 226,000 டோலர் அபராதமும் விதித்துள்ளது ஃபிஃபா.

இந்த விவகாரத்தில் பயிற்சியாளர் ப்ரீஸ்ட்மேன் ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளார்.

கனேடிய கால்பந்து சங்கத்தின் அதிகாரிகளான லோம்பார்டி மற்றும் மாண்டரும்ஆகியோரை ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Tags

Next Story