பாரீஸ் ஒலிம்பிக்ஸ் இந்தியர்கள் பங்கேற்கும் இன்றைய போட்டி விவரங்கள் !!

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் இந்தியர்கள் பங்கேற்கும் இன்றைய போட்டி விவரங்கள் !!

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 7-வது நாளாக இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்றுள்ளனர்.

தடகளம்: பரம்ஜித் சிங், அக்ஷ்தீப் சிங், விகாஷ் சிங் (ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), காலை 11 மணி. பிரியங்கா (பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), பகல் 12.50 மணி.

கோல்ப்: ககன்ஜீத் புல்லார், ஷூபாங்கர் ஷர்மா (ஆண்கள் தனிநபர் முதல் சுற்று), பகல் 12 30 மணி.

துப்பாக்கி சுடுதல்: ஸ்வப்னில் குசாலே (ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை இறுதிப்போட்டி), பகல் 1 மணி. சிப்ட் கவுர் சம்ரா, அஞ்சும் மோட்கில், (பெண்ககளுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று), மாலை 3 30 மணி.

ஆக்கி: இந்தியா- பெல்ஜியம் (ஆண்கள்) லீக் சுற்று ஆட்டம், பிற்பகல் 1 30 மணி.

குத்துச்சண்டை: நிகாத் ஜரீன் (இந்தியா)- வு யு (சீனா), (பெண்கள் 50 கிலோ எடைபிரிவு 2-வது சுற்று), பிற்பகல் 2 30 மணி.

வில்வித்தை: பிரவீன் ஜாதவ் (இந்தியா)- காவ் வெஞ்சாவ் (சீனா), (ஆண்கள் தனிநபர் பிரிவு), பிற்பகல் 2.31 மணி.

பாய்மரப்படகு: விஷ்ணு சரவணன் (ஆண்கள் டிங்கி), மாலை 3.45 மணி. நேத்ரா குமணன் (பெண்கள் டிங்கி), இரவு 7.05 மணி.

Tags

Next Story