ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல் அணியை வீழ்த்தியது பஞ்சாப் !!

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல் அணியை வீழ்த்தியது பஞ்சாப் !!

ஐபிஎல்

நேற்று ராஜஸ்தான் ராயல் அணியுடன் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பர்ஸபாரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட் செய்தது ஜெய்ஸ்வால், காட்மோர் இணைந்து இன்னிசை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 4 ரன் எடுத்து கிளின் போல்டாக அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

இதனால் பொறுமையாக விளையாடியகாட்மோர் – சஞ்சு சாம்சன் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்தது இருவரும் தலா 18 ரன் அடுத்த அடுத்த ஆட்டமிழக்க, ராஜஸ்தான் 42 ரன்னுக்கு மூன்று விக்கெட் இழந்து திணறியது.

களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்துள்ளது. பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 4 ரன்னில் வெளியேறினார். மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்திய பேர்ஸ்டோ 22 பந்தில் 14 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஷசாங் சிங் டக் அவுட் ஆனார். அடுத்து சிறிது நேரத்தில் ரிலீ ரோசோவ் 22 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷசாங் சிங் டக் அவுட் ஆனார். அடுத்து சிறிது நேரத்தில் ரிலீ ரோசோவ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் கேப்டன் சாம் கரன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய ஜித்தேஷ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரன் அரை சதம் அடித்து அசத்தினார். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அதிகபட்சமாக சாம் கரன் 63 ரன் (41 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார். ரிலே ரோஸ்சோவ் 13 பந்துகளில் 22 ரன் எடுத்தார். ராஜஸ்தான் பந்துவீச்சில் ஆவேஷ்கான், சகால் தலா 2 விக்கெட், போல்ட் 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ச்சியாக 4வது தோல்வியை சந்தித்தாலும் ராஜஸ்தான் 2வது இடத்தில் நீடிக்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story