சாலையோர விரைவு சைக்கிள் போட்டி

சாலையோர விரைவு சைக்கிள் போட்டி

சீர்காழியில் மாவட்ட அளவிலான சாலையோர விரைவு சைக்கிள் போட்டி 

சீர்காழியில் மாவட்ட அளவிலான சாலையோர விரைவு சைக்கிள் போட்டி
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்படும், சாலையோர மிதிவண்டி போட்டியானது, சீர்காழி எஸ்.எம்.எச் மேனிலைப்பள்ளி பொறுப்பில், இவ்வாண்டுக்கான போட்டிகள் நடைபெற்றது. சீர்காழி பைபாஸ் சாலையில், 6 வகையிலான சைக்கிள் போட்டிகள்,நடத்தப்பட்டது. போட்டியில், முதலிடம் பிடித்தவர்கள், ஜனவரி மாதம் நடைபெற உள்ள, மாநிலப் போட்டிக்கு, அனுப்பி வைக்கப்பட உள்ளனர். கொள்ளிடம், காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர், அகோரமூர்த்தி, போட்டியை கொடியசைத்து, துவக்கி வைத்தார். இப்போட்டியில் ,வெற்றிபெற்ற 14 வயது பிரிவில் டி.கிஷோர்ஸ்ரீ, 8ம் வகுப்பு, சீர்காழி எஸ்.எம்.எச் மேனிலைப்பள்ளி மாணவர். எஸ்.கபினியா, 8ம் வகுப்பு ,மயிலாடுதுறை, ராஜ் மெட்ரிக் பள்ளி மாணவி. 17 வயது பிரிவில், எம். தமிழ்செல்வன், 9ம் வகுப்பு மாணவர், திருமுல்லைவாசல் அரசு மேனிலைப்பள்ளி. ஆர்.ஹரிணி சந்திரன், 10ம் வகுப்பு, மயிலாடுதுறை, குட்சமாரிட்டன் மெட்ரிக் பள்ளி மாணவி. 19 வயது, பிரிவில், ஜி.எஸ்.கவியன், 11ம் வகுப்பு, மயிலாடுதுறை, ராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர். ஆர்.தர்ஷினி, 10ம் வகுப்பு, சீர்காழி எஸ்.எம்.எச் மேனிலைப்பள்ளி சேர்ந்த மாணவி, இவர்கள், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story