ஐபிஎல்-இல் ஷமி?

ஐபிஎல்-இல் ஷமி?

ஐபிஎல்-இல் ஷமி? 

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக ஜொலித்தவர் ஷமி. நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி இருந்தார் ஷமி. அதன்பின் இடது கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு செல்லலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இந்த முறை ஐபிஎல் தொடரில் அவர் ஆடுவது கேள்விக்குறியே என கூறப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story