கால்பந்து, கையுந்து போட்டிகளில் மாநில அளவில் சாதனை

கால்பந்து, கையுந்து போட்டிகளில் மாநில அளவில் சாதனை

சேலம் பள்ளி மாணவிகள் கால்பந்து, கையுந்து போட்டிகளில் மாநில அளவில் சாதனை

சேலம் பள்ளி மாணவிகள் கால்பந்து, கையுந்து போட்டிகளில் மாநில அளவில் சாதனை
தமிழக பள்ளிக்கல்வி துறையின் சார்பாக 39-வது பாரதியார் தினகுழு விளையாட்டுப் போட்டிகள் கோயம்புத்தூர் மாவட்டம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 19- வயது உட்பட்டோருக்கான மாணவிகள் கால்பந்து போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சார்ந்த 40 அணிகள் கலந்து கொண்டன. இதில் சேலம் பேளூர் மெயின்ரோடு மான்போர்ட் நகரில் உள்ள அ.நா.மங்கலம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணியினர் தங்களோடு போட்டியிட்ட அனைத்து அணியினரையும் வென்று, இறுதிப்போட்டியில் திருவாரூர் மாவட்ட அணியினரை 4-1 என்ற கோல் கணக்கில் வென்று தமிழக அளவில் முதலிடம் பெற்றது. மேலும் இதே பிரிவு கையுந்து பந்து போட்டி கோயம்புத்தூர் கேபிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அ.நா.மங்கலம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணியினர் மாநில அளவில் 2-ம் இடம் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் இப்பள்ளி மாணவிகள் தமிழக அளவில் கால்பந்து போட்டியில் முதலிடம் மற்றும் கையுந்து பந்து போட்டியில் 2-ம் இடமும் பெற்றுள்ளனர். தமிழக அளவில் வெற்றி பெற்று சாதனை புரிந்த கால்பந்து மற்றும் கையுந்துபந்து அணி வீராங்கனைகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் தோமினிக்கலா மேரி, சாமிவேல் , சேகர் ஆகியோரை தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியருமான அருட்சகோதர் சகாயராஜ் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story