டி20 - உலகக் கோப்பை : 125 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி !!

டி20 - உலகக் கோப்பை : 125 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி !!

டி20 

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், உகாண்டா அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தில் உகாண்டா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடிய ரன்களை குவித்தனர்.

அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன குர்பாஸ் 76 ரன்களிலும், இப்ராஹிம்சத்ரான் 70 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர். பின்பு களமிறங்கிய வீரர்களின் யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இதன் மூலம் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 76 ரன்கள் குவித்தார்.

உகாண்டா தரப்பில் அதிகபட்சமாக காஸ்மாஸ் கியூட்டா மற்றும் மாசாபா தல இரண்டு விக்கெட் வீழ்த்தினர். இதனை அடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் களமிறங்க உகாண்டா 16 ஓவர்களில் 58 ரண்களில் உகாண்டா ஆல் அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.

Tags

Next Story