டி.என்.பி.எல். கிரிகெட் போட்டி !!

டி.என்.பி.எல். கிரிகெட் போட்டி !!

டி.என்.பி.எல்.

தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) போட்டியின் 8வது தொடர் ஜூலை 5ம் தேதி சேலத்தில் தொடங்கியது. சேலத்தை தொடர்ந்து கோவை களத்துக்கான ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன.

கடைசி ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், சேப்பாக் கில்லீஸ் அணிகள் களம் இறங்கினர்.இதுவரை நடந்த 17 ஆட்டங்களில் முதல் 4 இடங்களில் உள்ள கோவை கிங்ஸ், நெல்லை கிங்ஸ், திருச்சி சோழாஸ், சேப்பாக் கில்லீஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் முன்னிலையில் இருக்கின்றன.

இன்னும் 11 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் கடைசி 4 இடங்களில் உள்ள மதுரை பேந்தர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகளும் முதல் 4 இடங்களை பிடிக்கும் வாய்ப்பில் நீடிக்கின்றன.

இந்நிலையில் டிஎன்பிஎல் தொடரில் இன்று ஓய்வு நாள். அடுத்து நெல்லை களத்துக்கான ஆட்டம் நாளை இந்தியன் சிமென்ட்ஸ் திடலில் தொடங்குகிறது. அங்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் திருச்சி சோழாஸ்-நெல்லை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

நெல்லையில் ஜூலை 24ம் தேதி வரை லீக் சுற்று ஆட்டங்கள் நடக்கும். நெல்லையை தொடர்ந்து திண்டுக்கல் களத்துக்கான ஆட்டங்கள் ஜூலை 26ம் தேதி தொடங்கும். டிஎன்பிஎல் இறுதி ஆட்டம் சென்னையில் ஆகஸ்ட் - 4ம் தேதி நடைபெறும்.

Tags

Next Story