2024-T20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி !!
அமெரிக்கா
T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 11 வது போட்டி நேற்று இரவு நடந்தது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா மோதிய நிலையில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 159 ரன்கள் சேர்த்தது.
பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 44 ரன்கள் சதாப் கான் 40 ரன்கள் சேர்த்தனர். கடைசியில் களம் இறங்கிய சாகின்ஷா அப்ரிடி 23 ரண்களை எடுத்தார். இதனை அடுத்து 160 என்ற இலக்கை துரத்தி அமெரிக்கா அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அமெரிக்காவின் துவக்க வீரருமான கேப்டன் மொனாக் படேல் 38 பந்துகளில் அரை சதம் கடந்து அவுட் ஆனார். இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் தங்கள் பங்கிற்கு ரன்களை சேர்க்க அந்த அணி20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது 159 ரன்கள் சேர்த்தது.
இதன் காரணமாக போட்டி சமனில் முடித்தது, இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரையில் முதலில் பேட் செய்த அமெரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதன் காரணமாக போட்டியில் அமெரிக்கா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது t20 உலக கோப்பை தொடரில் இரண்டாவது சூப்பர் ஓவரா போட்டியாக இது அமைந்தது.