பும்ரா முதல் ஓவரை வீசாதது ஏன்? பீட்டர்சன் கேள்வி!

பும்ரா முதல் ஓவரை வீசாதது ஏன்? பீட்டர்சன் கேள்வி!

பீட்டர்சன்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ஹர்த்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. சுப்மன்கில் தலைமையிலான குஜராத் அணி தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி பெற்றது.

குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதல் ஓவரை வீசவில்லை. 3-வது பவுலராக ஆட்டத்தின் 4-வது ஓவரில்தான் பந்து வீச பந்து வீச வந்தார்.

இது தொடர்பாக பும்ரா முதல் ஓவரை வீசாதது ஏன்? எனக்கு இது புரியவில்லை என்று பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு கவாஸ்கர் பதில் அளிக்கும்போது,மிக நல்ல கேள்வி, மிக மிக நல்ல கேள்வி என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story