பெண்கள் டி20 உலக கோப்பை : ஸ்காட்லாந்து வீழ்த்தி வங்கதேசம் வெற்றி !!
பெண்கள் டி20 உலக கோப்பை
ஷார்ஜா: ஐசிசி பெண்கள் டி20 உலக கோப்பை நேற்று ஷார்ஜாவில் தொடங்கிய நிலையில் இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசம்-ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய வங்கம் தடுமாறி ரன் குவித்த நிலையில் 20ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்களை இழந்து 119ரன் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஷோபனா மோஸ்தரி 36, ஷாதி ராணி 29 ரன் எடுத்தனர். ஸ்காட்லாந்து தரப்பில் சாஸ்கியா ஹோர்லி 2ஓவர் வீசி 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதனையடுத்து 120ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாரா பிரய்ஸ் 49ரன் விளாசி கடைசி வரை களத்தில் நின்றார்.
ஆனாலும் 20 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து 7விக்கெட் இழப்புக்கு 103ரன் மட்டுமே எடுத்தது. அதனால் வங்கம் 16ரன் வித்தியாசத்தில் வங்கம் முதல் வெற்றியை பெற்றது.
கடந்த 10 ஆண்டுகளில் உலக கோப்பைகளில் வங்கத்தின் முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.