உலகக்கோப்பை வென்ற கால்பந்து வீரருக்கு 4 ஆண்டுகள் தடை

உலகக்கோப்பை வென்ற கால்பந்து வீரருக்கு 4 ஆண்டுகள் தடை

பால் போக்பா

பால் போக்பா 2018-ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்றவர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று யுவென்டஸ் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சீரி ஏ தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், பால் போக்பா உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனிடையே இத்தாலியின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு தீர்ப்பாயத்தால் போக்பா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.

போக்பாவின் ஊக்கமருந்து மறு ஆய்வு சோதனை அக்டோபர் மாதம் நடத்தப்பட்டு அதிலும் உறுதி செய்யப்பட்டது. இதில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் பால் போக்பாவுக்கு 4 ஆண்டுகள் கால்பந்து போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story