அமாவாசை அன்று அன்னமிடும் அரும்பணி

கோப்பு படம்
மதுரையில் ரோட்டோரம் வசிக்கும் வறியோர், ஆதரவற்றோர், முதியோர்களுக்கு உங்களின் நன்கொடைகளாலும், பேராதரவினாலும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக அன்னமிடும் அரும்பணியை செய்து வருகிறது மதுரையின் அட்சய பாத்திரம்.
இந்த இனிய தருணத்தில் அன்னதானம் வழங்கிட ஒவ்வொரு சோற்றுப் பருக்கைக்கும் ஆதரவாக இருந்த தங்கள் ஒவ்வொருவருக்கும் எனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள்.! "முன்னோரின் ஆன்மாவைக் குளிரச் செய்யும்" அமாவாசை தினத்தில் (06.06.2024 வியாழக் கிழமை) மதுரையின் அட்சய பாத்திரத்திற்கு' அருட்கொடை தந்து,
இல்லாதோர்க்கு அன்னதானம் செய்து முன்னோர்களின் ஆசி பெறுங்கள் அமாவாசை நாட்களில் காகத்திற்கு அன்னம், பசுவுக்கு அகத்திக்கீரை, புல் கொடுப்பது, ஏழை எளியவருக்கு அன்னதானம் செய்வது பித்ருக்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். தினமும் 300 பேருக்கு அன்னம் வழங்கும் அறப்பணியை செய்யும் அட்சயப் பாத்திரம்,
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் மேலும் 500 லிருந்து 1,000 பேருக்கு உணவு வழங்குவது வழக்கம். இத்திருப்பணியில் ஒருவருக்கு ரூ. 40 வீதம்,10 அல்லது 25 பேர் என்ற கணக்கிலோ, நாள்தோறும் ஒருவர் என்ற கணக்கில் ரூ.1,200 எனவோ தாங்கள் விரும்பும் வழிகளில், அருட்கொடை வழங்கி பசிப்பிணி போக்கிடலாம். அமாவாசை நாளில் அன்னதானம் செய்து,
உங்கள் முன்னோர்களைக் குளிர்வித்து அவர்களின் பரிபூரண ஆசியைப் பெறுங்கள். (குறிப்பு: GPay யில் இந்த அக்கவுண்ட் காட்டாவிட்டால், GPay - Search பகுதியில் எனது 9442630815 என்ற எண்ணை டைப் செய்து அனுப்பிட வேண்டுகிறேன்) மக்கள் பணியில்,
Rtn. நெல்லை பாலு நிறுவனர் - மதுரையின் அட்சய பாத்திரம். GPay & Phonepe: +91 9442630815அமாவாசை அன்று அன்னமிடும் அரும்பணியில் நீங்கள் ஈடுபட அன்பு வேண்டுகோள் ----