குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பீரோ தீப்பிடித்து எரிந்தது
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பீரோ தீப்பிடித்து எரிந்தது
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் மூலஸ்தானத்தில் இருந்த மர பீரோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
எரிந்து கொண்டிருந்த தீபத்தை அணைக்காமல் சென்றதால் நேர்ந்த விபரீதம்
குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது நவகிரக ஸ்தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் மூலஸ்தானம் பகுதியில் கோவில் முக்கிய பொருட்கள் மர பீரோவில் வைக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் அங்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபம் அணைக்காமல் சென்றதால் அருகில் இருந்த மர பீரோவின் மீது நெருப்பு பட்டவுடன் மர பீரோ தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. வழக்கம்போல் கோவிலின் நடை சாற்றப்பட்ட நிலையில் திடீரென கோவிலில் இருந்து
நெருப்பு மற்றும் புகை வருவதாக வந்த தகவல் எடுத்து கோவில் ஊழியர்கள் வந்து பார்த்தபோது மூலஸ்தானத்தில் இருந்த மர பீரோ தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து
ஊழியர்கள் தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டனர் ஆனால் அதிக அளவில் தீ எதிந்ததால் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர் இதில் பீரோவில் இருந்த பொருட்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது இதையடுத்து கோவில் அதிகாரிகள் எரிந்து போன மர பீரோவை அங்கு இருந்து அகற்றிவிட்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூலஸ்தானத்தில் எரிந்து கொண்டிருந்த தீபத்தை அணைக்காமல் சென்றதே தீ விபத்திற்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் உரிய நேரத்தில் தீ அனைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.