12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முப்பூசை!!

ஒட்டுமொத்த ஊர் மக்களும் ஊரே காலி செய்து முப்பூசையில் கலந்து கொள்வார்கள் நாமக்கல் அருகே வினோதம்....!!
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முப்பூசை!! ஒட்டுமொத்த ஊர் மக்களும் ஊரே காலி செய்து முப்பூசையில் கலந்து கொள்வார்கள் நாமக்கல் அருகே வினோதம்....!! நாமக்கல், துறையூர் சாலை, N.கொசவம்பட்டி கவராநகரில் வசிக்கும் பெரிய பண்ணை பங்காளிகள் ஒன்று சேர்ந்து அனைவரும் இந்த முப்பூசையில் சுமார் 3500-க்கும் மேற்பட்ட பங்காளிகள் கலந்து கொள்வார்கள் நாமக்கல்- துறையூர் சாலை N.கொசவம்பட்டி கவரா நகரில் வசிக்கும் பெரிய பண்ணை பங்காளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கவரா நகரில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோவில் வீட்டில் நாளை (பிப்ரவரி-16) வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் பூஜை செய்து விட்டு, பூஜை கூடையை மேளதாளத்துடன் ஊர்வலமாக கவரா நகர் மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து சென்று அங்கிருந்து , அவரவர் வாகனத்தில் முசிறி அருகே உள்ள வெள்ளாளப்பட்டி ஏரிக்கரையில் ஒன்று கூடி மற்ற ஊர்களில் இருந்து வருகிற பங்காளிகள் கொண்டு வரும் கூடைகளுடன் அனைவரும் கோவில் வீட்டிற்கு செல்வார்கள்.அன்று மாலை 5 மணியளவில் அனைத்து பூஜை கூடைகளுக்கு தீர்த்தம் தெளித்து கன்னிமார் கோவிலுக்கு செல்வார்கள். அங்கு பெண்களுக்கு மடிபால் கட்டும் சடங்கு நடைபெறும்.இந்த சடங்கு பூஜை வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த நாள் ( பிப்ரவரி -17) சனிக்கிழமை காலை 6 மணியளவில் அந்த பூஜை கூடைகளை எடுத்துக் கொண்டு அனைவரும் வெள்ளாளப்பட்டி கோவில் வீட்டில் சாமி கும்பிட்ட பிறகு அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று விடுவார்கள். அதன் பின்னர் வருகிற (பிப்ரவரி -18) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் வெள்ளாளப்பட்டியில் இருந்து பூஜை கூடைகளை பெரியாண்டவர் கோவிலுக்கு எடுத்து சென்று பரம்பரை வழக்கப்படி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.இந்த முப்பூசையில் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story