18 மாரியம்மன் கோவில் பண்டிகை நிகழ்ச்சி நிறைவு

18 மாரியம்மன் கோவில் பண்டிகை நிகழ்ச்சி நிறைவு

மாரியம்மன் கோவில் திருவிழா

18 மாரியம்மன் கோவில்களில் ஆண்டு திருவிழா நிறைவடைந்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 18 மாரியம்மன் கோவில்களில் ஆண்டு திருவிழா கடந்த 17ஆம் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது இந்த திருவிழாவில் மாரியம்மன் கோயில்களில் கம்பங்கள் கும்பங்கள் வைக்கப்பட்டு தினசரி சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன இந்த நிகழ்வின் இறுதி நிகழ்வான கம்பம் விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது திருச்செங்கோடு பெரிய மாரியம்மன் கோயில் அஞ்சு ரோடு மாரியம்மன் கோயில் அழகு முத்து மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 18 மாரியம்மன் கோயில்களில் வைக்கப்பட்டிருந்த கும்பங்கள் கம்பங்கள் இன்று காலை பிடுங்கப்பட்டு பெரிய தெப்பக்குளத்தில் விடப்பட்டது வழிநெடுகிலும் பக்தர்கள் கம்பத்தின் மீதும் கும்பத்தின் மீதும் உப்பு மிளகு தூவி தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து மாரியம்மனுக்கு நேர்த்திகடனை செலுத்தினர் பல்வேறு பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும் மாவிளக்கு எடுத்தும் தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர் இந்த கம்பம் விடும் நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பக்திபரவசத்துடன் வழிபட்டனர்
Read MoreRead Less
Next Story