கண் துவட்டி அம்மன் திருக்கோவில் 27 ஆம் ஆண்டு பங்குனி உற்சவ விழா

திரளான பக்தர்கள் அலகு புத்தியும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்
மதுரை பாரதிபுரம் சீமான் நகர் கிராமத்தில் அமைந்துள்ள அரியநாச்சி உக்கிரநாச்சி என்ற ஸ்ரீ கண் துவட்டியம்மன் திருக்கோவில் 27 ஆம் ஆண்டு பங்குனி உற்சவ விழா கடந்த பங்குனி ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பாண்டி கோவிலில் தீர்த்தம் எடுத்தல் மற்றும் சக்தி கரகம் எடுத்து மாவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுத்தல் அலகு குத்துதல் அக்கினி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றதுஉள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர்கள் உட்பட ஏராளமான அலகு குத்தியும் பால்குடம் எடுத்தும் அக்னி சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இந்நிகழ்வில் சுற்றியுள்ள பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story