ராமேஸ்வரம் தை அமாவாசை நாட்களை முன்னிட்டு கோவில் நடை திறப்பில் மாற்றம் !

Rameswaram
ராமேஸ்வரம் ஆலயத்திற்கு ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்று ஆகும்.
இந்த ஆண்டு தை அமாவாசை வருகிற 29-ந்தேதி அன்று வருகிறது. இதனிடையே தை அமாவாசையை முன்னிட்டு 29-ந் தேதி ராமேஸ்வரம் கோவில் நடை திறப்பில் மாற்றம் செய்துள்ளனர்.
வருகிற 29-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் கோவில் நடையானது திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை படிகலிங்க தரிசனம் நடைபெறுகின்றது. தொடர்ந்து வழக்கமான கால பூஜை நடைபெறும்.
பின்னர் பகல் 11 மணிக்கு மேல் ராமபிரான் தங்க கருட வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் வெள்ளி ரத புறப்பாடு நடைபெறுகின்றது. அதுபோல் வழக்கமாக பகல் 1 மணிக்கு அடைக்கப்படும் கோவில் நடையானது தை அமாவாசையை முன்னிட்டு 29-ந்தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு அன்று இரவு 9 மணிக்கு பின்னரே அடைக்கப்படும். இந்த தகவலை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.