பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்கத் திருவிழா

பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்கத் திருவிழா

திருவிழாவில் கலந்து கொண்டவர்கள்

குமரி இட்டகவேலி ஶ்ரீ நீலகேசி அம்மன் கோவிலில் 151 பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை திருவிழா இன்று நடைபெற்றது

குமரி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படும் கோவில்களில் ஒன்றான குலசேகரத்தை அடுத்த இட்டகவேலி ஶ்ரீ நீலகேசி அம்மன் கோவில் தூக்கத்திருவிழா கடந்த 17 ம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்நிலையில் விழாவின் 7ஆம் திருவிழா நாளான இன்று பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை திருவிழா நடத்தப்பட்டது. முன்னதாக கோவிலில் வழிபடும் அம்மன்கள் மூன்று பேரும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் எழுந்தருளினர்.

தொடர்ந்து தூக்க தேரில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு வில்லுகளில் நான்கு தூக்கக்காரர்கள் பச்சிளம் குழந்தைகளை தூக்கி வானுயுர உயர்ந்தபடி நிற்கும் தேரை பக்தர்கள் கூடி இழுத்து கோவிலை சுற்றி ஒருமுறை வலம் வைத்து தூக்க நேர்ச்சையை முடித்து வைத்தனர்.இந்த வருடம் 151 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் ஆசி பெற்று சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story