நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரம்

நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரம்

 ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன்

ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மட்டுமல்லாமல் பல்வேறு விசேஷ தினங்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி ஆடி மாதத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்தன. மேலும்,கடந்த வாரங்களில் வளையல் அலங்காரம், அன்னம் அலங்காரம் என பல்வேறு அலங்காரங்கள் மாரியம்மனுக்கு செய்யப்பட்டது. பின்னர், இன்று ஆடி மாதம் ஆடி கார்த்திகையை முன்னிட்டு 6 ஆம் ஆண்டாக நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த அலங்காரத்தை தரிசிப்பதால் குடும்ப அபிவிருத்தி சகல ஐஸ்வரியம், தொழில் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி என சகல ஐஸ்வர்யம் போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம் அதன்படி இன்று ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசைகள் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் வேண்டுதல்கள் வைத்த பக்தர்கள் அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு கூழ் ஊற்றி மகிழ்ந்தனர்.

இந்த தரிசனத்தை காண நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

Tags

Next Story