பிரமிக்கும் பொற்கோயில்!

பிரமிக்கும் பொற்கோயில்!

பொற்கோயில்

திருப்பதி, திருமலை திருக்கோயில்களில் இருந்து வரவழைக்கப்பட்ட கொல்லர்கள் மூலம் கோயிலின் மைய கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது பிரம்மாண்டமாக உள்ள இந்த கோயில் மனதிற்கு அமைதி தருவதாக அமைந்துள்ளது.

அன்றைய காலத்தில் பொற்கோயில் என்று சொன்னால் நாம் அனைவருக்கும் நினைவில் வருவது பஞ்சாபில் உள்ள அமிர்தரஸ் கோயில் தான் ஆனால் இன்றோ வேலூரில் உள்ள பொற்கோயில் தான் நினைவிற்கு வருகிறது வேலூரில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீபுரம் என்ற இடத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 1500 கிலோ தங்கத்தால் கலை நுணுக்கத்துடன் பிரம்மாண்டமாக ஸ்ரீ நாராயணி பீடத்தினால் கட்டப்பட்டுள்ளது. எனவே இதனை தங்க கோயில் என்று அழைக்கிறார்கள் தாமரை இதழ்களை போன்ற வடிவத்தில் பீடம் அமைத்து அதன் மேல் நாராயணி சிலையை வைத்துள்ளனர் இந்த தங்க கோயிலின் ராஜகோபுரம் 48 அடி உயரத்தில் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கருவறை வசந்த மண்டபம் ஆகியவை உள்ளன. தங்கத்தால் ஆன இந்த மூன்று மண்டபங்களையும் அழகிய கலைநயத்தால் ஆன 50க்கும் மேற்பட்ட தூண்கள் தாங்கி நிற்கின்றன இந்த கோவிலை சுற்றி 9 அடி ஆழத்தில் குளம் வெட்டி தண்ணீரை நிரப்பி இரவில் மின் விளக்குகளின் பிம்பம் தகதகவென மின்னுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. தங்கக் கோவிலை தரிசிக்க பக்தர்கள் செல்லும் வழியில் நடைபாதை நட்சத்திர வடிவில் 13 வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது தங்கக் கோயிலின் உள்ளே நுழைந்து வெளியே வரும் வரை எப்போதும் மந்திர சப்தமும் பக்தி கீதங்களும் ஒளிபரப்பப்படுகின்றன. மேலும் இங்கே பெருமாள் கோயிலை போன்று தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது தங்கத்தால் ஆன சடாரியை வைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கப்படுகிறது.

குங்கும பிரசாதமும் தரப்படுகிறது இந்த தங்க கோவிலை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி அமெரிக்கா, பிரான்ஸ், கனடா ஆஸ்திரேலியா உட்பட 15க்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சார்ந்த ஏராளமானோர் ஸ்ரீ புரத்திற்கு வந்து செல்கின்றனர். அனைத்து மதத்தினரும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தர்மங்கள் பற்றிய பொன்மொழிகள் பல நூற்றுக்கணக்கான பலகைகளில் வைக்கப்பட்டுள்ளன. திருப்பதி, திருமலை திருக்கோயில்களில் இருந்து வரவழைக்கப்பட்ட கொல்லர்கள் மூலம் கோயிலின் மைய கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது பிரம்மாண்டமாக உள்ள இந்த கோயில் மனதிற்கு அமைதி தருவதாக அமைந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story