இராமநாதபுரம் மாவட்டத்தின் பிரமிக்கும் கோவில்கள்!

இராமநாதபுரம் மாவட்டத்தின் பிரமிக்கும் கோவில்கள்!

இராமநாதபுரம் மாவட்ட கோவில்கள் 

தேவிபட்டினம்

பண்டைய காலத்தில் சிறு துறைமுகமாக விளங்கிய இந்த ஊர் இராமநாதபுரத்துக்கு வடகிழக்கு 16 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையோரம் உள்ளது. நவகிரகங்களை குறிக்கும் ஒன்பது தூண்கள் இவ்வூர் கடலுக்குள் இருப்பதால் இவரை நவபாஷாணம் என்றும் செல்வதுண்டு சொல்வதுண்டு .இங்கு ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படும் ஒன்பது கிரகங்கள் இங்குள்ளனர். இந்தியாவிலேயே இங்குதான் கடலில் நவகிரகங்கள் உள்ளன .உலகநாயகி அம்மன் கோயில் இருப்பதால் தேவிபட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள சக்கரை தீர்த்தத்தில் நீராடிய பிறகே பக்தர்கள் கடலில் குளித்தெழுகிறார்கள்

திருவாடானை

வருணனின் மகன் வாரணி ஒரு முறை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற முனிவர் வாருணி ஆட்டுத்தலையும் ,யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார் . வாரு ணியும் அவ்வாறே ஆகதவற்றை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்பு கேட்க சூரியனால் வழிபட்ட இத்தலத்து மூர்த்தியான சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார் .இத்தலம் வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றான். இங்கு ஒரு சிறந்த சிவாலயம் உள்ளது. இறைவன் ஆதி ரத்னேஸ்வரர் என்றும் இறைவி சினேக வள்ளியம்மாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

சேதுக்கரை

இந்த ஊருக்கு ஆதிசேதுக்கரை என்னும் பெயர் உண்டு .இக்கடற் பகுதியில் தான் ராமர் கட்டிய அணை உள்ளது என்றொரு செய்தியும் உண்டு . இக்கடற் பகுதியை மகோததி என்றும் மற்றொரு பகுதியை ரத்தன நகரம் என்று அழைப்பர் .இங்குள்ள அகத்தியர் கோயில் விக்ரகத்தின் மேல் பகுதி வெண்மையாகவும், கீழ் பகுதி கருப்பாகவும் காணப்படுகிறது,

திரு உத்தரகோசமங்கை

மாணிக்கவாசகர் ஆல் பாடல் பெற்ற உத்தரகோசமங்கை எனும் தளம் சிதம்பரத்துக்கு அடுத்து நடராஜர் திருத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது .உத்தரகோசமங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்ற பெருமையுடன் சொல்கிறது புராணம் .சிவதலங்களில் பாடல் பெற்ற முதல் தலம் இந்த தலம் தான் .இதன் மூலம் இந்த தலமே தமிழ்நாட்டின் முதல் சிவாலயம் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஓம் எனும் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு சிவபெருமான் இத்தலத்தில் வைத்து தான் ரகசியமாக சொல்லிக் கொடுத்தார் என்பார்கள். மூலவருக்கு மங்கள நாதர் என்னும் திருநாமம் உண்டு மங்களேஸ்வரர் காட்சி கொடுத்த நாயகர் பிரளயகேஸ்வரர்என்றும் அழைக்கப்படுகிறார் .உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனை தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்த மண்டோதரி பின்பு இத்தல ஈசனையும் அம்பாளையும் வழிபட்டாலள். அதன்பிறகு ராவணனை கரம் பிடித்தார். மேலும் ராவணன் மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது இங்குள்ள ஐந்தரை அடி உயரமுள்ள நடராஜபெருமான் முழுவதும் மரகத திருமேனி உடையவர் ஆண்டு முழுவதும் சந்தன காப்பிலே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் ஆண்டுக்கு ஒரு முறை திருவாதிரை அன்று மட்டுமே சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். அதுவும் 32 வகை மூலிகைகளால் அபிஷேகம். செய்யப்படும். ஆருத்ரா தினமான அன்று மட்டுமே நடராஜரை மரகத கோலத்தில் கண்டு களிக்கலாம். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் சந்தனம் காப்பு செய்யப்பட்டு நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் .சூரிய உதயத்திற்கு முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெறும் அந்த சந்தன காப்பிலே அடுத்த மார்கழி திருவாதிரை வரை நடராஜர் காட்சி தருவார்.

Tags

Next Story