தை அமாவாசையில் முன்னோர் வழிபாடு

தை அமாவாசையில் முன்னோர் வழிபாடு

தை அமாவாசை

தை அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு, தெய்வ வழிபாடு, மந்திர ஜெபம், தியானம்,ஆகியவற்றை செய்வதற்கு மிகவும் ஏற்ற நாளாகும். இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடும், தான தர்மங்களும், மற்ற நாட்களில் செய்வதை விட பல மடங்கு அதிக பலனை தரும். இந்த நாளில் நாம் செய்யும் தானங்களையும் தர்ப்பணம் போன்ற வழிபாடுகளையும் நம்முடைய முன்னோர்களே நேரடியாக வந்து ஏற்பதாக ஐதீகம் . தைஅமாவாசை நம்முடைய முன்னோர்கள் மீண்டும் பித்ருலோகத்திற்கு செல்லும் நாள் என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்துக்களின் மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று அமாவாசை. இது நம்முடைய பாவங்களை மட்டும் இன்றி நம்முடைய முன்னோர்களின் பாவங்களையும் போக்குவதற்கான மிக சிறந்த நாளாகும் .இந்த நாளில் புனித நீராடுவது, விரதம் இருப்பது, தானம் அளிப்பது, பித்ரு தர்ப்பணம் செய்வது ஆகிய பல மடங்கு அதிகமான புண்ணிய பலன்களை தரும் .பித்ரு தோஷம், பித்ரு சாபம், இருப்பவர்கள்பித்துருக்களின் ஆசியை பெறவேண்டும் என நினைப்பவர்கள் தவறாமல் இந்த நாளில் விரதம் இருக்க வேண்டும் .தை மாதத்தின் அனைத்து நாட்களும் புனித நீராட சிறப்பான நாள் என்றாலும் ,தை அமாவாசை அன்று புனித நதிகள், கடலில் நீராடினால்முந்தைய அனைத்து பிறவிகளிலும் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம் .அது மட்டுமல்ல மற்ற அமாவாசைகளில் விரதம் இருந்தால் பித்ரு தோஷம் மட்டுமே நீங்கும். ஆனால் தை அமாவாசையில் விரதம் இருந்தால் பித்ரு தோஷத்துடன் சனியினால் ஏற்படும் தோஷங்களும் நீங்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தை அமாவாசை தவற விடாதீர்கள்.

தை அமாவாசை தேதியும் நேரம்

பிப்ரவரி 09.ஆம் தேதி காலை 7. 53 மணிக்கு துவங்கி பிப்ரவரி 10ஆம் தேதி காலை 4.34 மணி வரை மட்டுமே அமாவாசை திதி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story