அண்ணாமலையார் என்றாலே அனைவருக்குள்ளும் ஒரு இன்பம் ஏற்படும் | ஆன்மீகம் | கிங் நியூஸ் 24x7

அண்ணாமலையார் என்றாலே அனைவருக்குள்ளும் ஒரு இன்பம் ஏற்படும் | ஆன்மீகம் | கிங் நியூஸ் 24x7
X

சிவ சிவ

அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. சிவமே என் வரமே

அண்ணாமலையார் என்றாலே அனைவருக்குள்ளும் ஒரு இன்பம் ஏற்படும்

காந்த மலை அல்லவா அண்ணாமலையை ஒரு முறை பார்த்தல் போதும் அடிக்கடி பார்க்க தோன்றும் .நீ எவ்வளவு பெரிய ஆளா வேணா இரு ஒரே ஒருமுறை திருவண்ணாமலை அண்ணாமலையார் தரிசனம் செஞ்சு பாரு அங்கு மலையாக காட்சி தருகிற அண்ணாமலையாரை கண் குளிர பாரு அவன் தரும் மன அமைதியை உன்னால் வேறெங்கும் பெற முடியாது

இவனுக்கு அண்ணாமலை தான் உயிர் ,உலகம் , உணவு ,சுவாசம் எல்லாம் .அனைத்தும் அண்ணாமலை தான்.அண்ணாமலையார் தரிசனம் செய்ய போகிறோம் என்றால் அந்த ஒரு வாரம் முழுவதும் ஒரே ஜாலி தான் .150 ரூபாய் கொடுத்து நீ திரையரங்கம் சென்று மூன்று மணி நேரம் கிடைக்கும் இன்பத்தை விட.


ஆயிரம் கணக்கில் நீ செலவு செய்து குளிர் பிரதேசங்கள் சென்று இரண்டு நாட்கள் கிடைக்கும் இன்பத்தை விட..மிகப்பெரிய இன்பம் அண்ணாமலையாரிடம் ஒரு நிமிடத்தில் கிடைத்து மணமானது அமைதி அடைவதை உணர்ந்து கொள்வாய் எத்தனையோ ஊர்களில் உள்ள எத்தனையோ ஆலயங்களுக்கு சென்று இருப்பார்கள்..

ஆனால் அண்ணாமலையார் திருத்தலத்தில் மட்டும் நீ உள்ளே வந்துவிட்டால் ஆலயத்தை விட்டு வெளியேற உன் மனம் ஆனது நிச்சயம் அனுமதிக்காது இன்னும் சிறிது நேரம் இருந்து செல், இன்னும் சிறிது நேரம்

இருந்து செல் என்று அவன் அழகில் மயங்கி நிற்கும்..திருவண்ணாமலையை நெருங்கும் பொழுது வாவென்று அழைக்கும் மலை,


அண்ணாமலையார் ஆலயத்தின் ராஜகோபுரம் கண்ணில் பட்டதும் உடல் பூரித்து, உள்ளம் பரவசப்படும் , எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருக்கும் ஆலயம் ஆனாலும் ஒரு வித அமைதியோடு இருக்கும் அன்னமலையை சற்று மேல் நோக்கி பார்த்து ரசித்தாள் போதும் நம்மை மீறி கைகள் உயரும் , கண்களில் கண்ணீர் பெருகும் மனதில் நிம்மதி ஒரு வித ஆனந்தம் யார் பார்த்தால் என்ன கேட்க சென்றது மறந்து அண்ணாமலை அழகில் மூழ்கி விடுவோம் .


ஆலயத்தை சுற்றி எத்தனை பக்தர்கள் இருந்தாலும் தனிமையில் இறைவனோடு இருப்பதாக உணர்ந்து அந்தத் தனிமையின் இனிமையில் அம்மைக்கொரு பாகம் தந்த அப்பனை ஆசை தீரப் பார்த்து ரசித்து உள்ளம் மகிழ உடல் மகிழ தரிசனம் செய்வோம் மகனே வந்துவிட்டாயா என்று அண்ணாமலை அப்பா கேட்பது போல இருக்கும்

அப்பா வந்து விட்டேன் என்று சொல்லி முகத்தில் ஒரு வித சிரிப்போடு அவன் அழகை கண் குளிரக்கண்டு ,அண்ணாமலை 2671 அடி உயரத்தில் அமைந்துள்ளது திருமாலும் பிரம்மாவும் காண முடியாதா ஆதி மலை அவன் அடியவர்களுக்கு மிக மிக அருகில், மனதில் அமர்ந்து அருள் புரிவார்..


ஏதாவது ஒன்னு ஆகக்கூடாது உடனே திருவண்ணாமலைக்கு போவதே வாடிக்கை ஆகிவிட்டது.நம்முள் அவனையும் அவனுள் நம்மையும் உணர வைத்து விடுவார் .நான் என்னும் கர்வம் அழித்து அனைத்தும் அவன் என்று தெளிவித்து அனுப்புவான்

ஆன்மாவை வலுக்கட்டாயமாக ஈர்க்கும் ஒரு காந்த மலை மௌனமாக இருந்து கொண்டே உள்ளத்தில் மகிழிச்சியை ஏற்படுத்தும் .அகங்காரம் கொண்டவர்கள் ஒரு 15 நிமிடம் இந்த மலையை உற்று பார்த்தால் போதும் அகங்காரம் அழிந்துவிடும்,


என்ன ஒரு அதிசயம் ஒரு உணர்ச்சியற்ற மலை போல நிற்கிறது ஆனால் நம்முள் பல உணர்வுகளை ஏற்படுத்தி பக்குவ படுத்துகிறது .அண்ணாமலை நமக்கு பல விஷயங்களை சொல்லி தரும்.நான் என்று கர்வம் கொண்டு ஆடதே அகிலத்தையே ஆட்டி படைக்கும் நானே ஆடமால் அமைதியாக இருக்கிறேன். அமைதியாக இரு.எதையோ நினைத்து காலத்தை வின் செய்யாதே என்னை நிணை முக்தி கிடைக்கும்,


அண்ணாமலையின் பெருமை அளவிட முடியாத ஒன்று*அண்ணாமலை அப்பா என்று நினைத்தால் போதும் இன்பம்சிவாய சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. சிவனே சரணாகதி . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி ஷிவானி கௌரி .




Tags

Next Story