சோமேஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம்

சோமேஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம்

சங்ககிரி சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம்

சங்ககிரி சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம்
சேலம் மாவட்டம் சங்ககிரி மலையடிவாரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. ஆரூத்ரா தரிசனத்தையொட்டி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் அருள்மிகு நடராஜர் மற்றும் அருள்மிகு சிவகாமிசுந்தரி அம்மாள் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு அதிகாலை முதலே பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story