தூத்துக்குடியில் ஆருத்ரா தரிசனம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடியில் ஆருத்ரா தரிசனம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவாதிரை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவாதிரை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மார்கழி மாதம் சிவாலயங்களில் திருவாதிரை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 10 நாட்களாக திருவாதிரை திருவிழா விமர்சையாக நடைபெற்றது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற்றது இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி நடராஜர் கோலத்தில் எழுந்தருளினார் பின்னர் சிறப்பு பூஜைகளுக்குப் பின் நடன தீபாராதனை நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை அம்பாளை வழிபட்டு சென்றனர் இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக திருவாதிரை களி வழங்கப்பட்டது

Tags

Read MoreRead Less
Next Story